கொற்றவனே மாலோடு வெள்ளியாகா
கூறேநீ மீனத்தில் குழவிதோன்ற கொற்றவனே மாலோடு வெள்ளியாகா அப்பனே அங்கத்தில் மச்சமுண்டு பாரேநீ கோணத்தி லிருந்த பேர்க்கு பகருவாய் நற்பலனை யறிந்துநீதான் யேரேநீ போகருட கடாக்ஷத்தாலே யெமலோகஞ் சேர்வனடா இயம்பினேனே மீன இலக்கினத்தில் பிறந்த சாதகனுக்கு புதனும், சுக்கிரனும் தீமை செய்யும் கிரகங்களேயாகும். அவர்களால் வீடு, திரவியம், நிலபுலன் வாய்த்தல். நேர்தலும் அங்கத்தில் மச்சமுண்டாதலும், இவர்கள் திரிகோணஸ்தானத்தில் நின்ற பேர்க்கு வாய்க்கும். இத்தகைய நற்பலன்களை கிரக நிலவரங்களை நன்கு ஆராய்ந்து கூறுக. என் குருநாதராகிய போகமா முனிவரது அருளாணையால் நான் அறிந்து கொண்ட வண்ணம் இச்சாதகன் எமலோகம் சேர்வது திண்ணம் என நான் உரைத்தேன். [எ-று]
Keine Kommentare:
Kommentar veröffentlichen