பாரப்பா பனிரெண்டில் மதியும்நிற்கப் பகருகின்ற பவுமனுமே மதிக்குயெட்டில் சீரப்பா செவ்வாய்க்கு யெட்டிதீயர் சிவசிவா சென்மனுமோ அன்னியபீசம் ஆரப்பா அயன்விதியை அரையலாமோ அப்பனே அனலனொடு குளிகன் சேர்ந்து கூரப்பா குடியிருக்க அட்டமத்தில் கொற்றவனே அவைபோலே கூறுவாயே. -விளக்க உரை- இன்னொரு சேதியையும் நீ கேட்பாயாக! 12ஆம் இடத்தில் சந்திரன் நிற்க மதிக்கு எட்டில் அந்த செவ்வாய் நிற்க அச் செவ்வாய்க்கு எட்டில் தீக்கோள்கள் நிற்பினும் சிவபரம் பொருளின் பேரருட் கருணையால் அச்சாதகன் அன்னியபீசம் என்றே கூறுக. அதேபோல் பிரமன் படைப்பின் விந்தை இன்னுமொன்றுளது. சூரியனோடு குளிகனும் இலக்கினத்திற்கு அட்டமத்தில் கூட அச்சாதகன் அன்னிய பீசமே என்று கூறுக.
Sonntag, 9. September 2012
Pulippani:அன்னியபீசம் பாரப்பா

Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen