Sonntag, 9. September 2012

Pulippani-குளிகன் 9




மூட்டுவாய் குளிகனுமோ பாக்கியத்தில் முகவசியன் அழும்பனடா பிதுர் துரோகி கூட்டுவாய் குவலயத்தில் தனமுள்ளோன் குற்றமில்லை கருமத்தின் குறியைக் கேளு நீட்டுவாய் நீணிலத்தில் கருமிதுரோகன் நிலையறிந்து நீயறிவாய் அய்யம்வாங்கி தீட்டுவாய் தின்பனடா விரலேஉச்சம் சிறப்பாக செப்புவாய் திண்ணந்தானே. -விளக்க உரை- இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் பெற்று மகிழ்வோனே யாவான். அதனால் குற்றமில்லை எனக் கூறுக. இனி பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பன். கிரக பலம் அறிந்து சிறப்பாகவும் திண்ணமாகவும் பலன் கூறுக.




Keine Kommentare:

Kommentar veröffentlichen