சீரே நீகுருவுக்கு வியமாறெட்டில் செழுமதியும் மதிலிருக்க சகடயோகம் ஆரே நீ அமடுபயம் பொருளும் நஷ்டம் அப்பனேபேர் விளங்கும் நிதியுமுள்ளோன் கூரே நிகுருவுக்கு கேந்திரகோணம் குழவிக்கு நிதி கல்வி மெத்தவுண்டு பாரே நீபோகருட கடாக்ஷத்தாலே பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே -விளக்க உரை- நான் கூறும் ஒரு சிறப்பினையும் நீ குறித்துக் கேட்பாயாக. குருபகவானுக்குப் பன்னிரண்டு, எட்டு, ஆறு ஆகிய இடங்களில் சிறந்த சந்திர பகவான் இருக்க ஏற்படுவது சகடயோகம் ஆகும். அதனால் ஏற்படும் பலன்கள் என்னவெனின் அமடு, பயம், பொருட்சேதம், எனினும் நற்கீர்த்தியே வாய்க்கும். நிதியும் சிறந்து காணும். இன்னுமொன்று குரு 1,4,7,10 மற்றும் 1,5,9 ஆகிய இடங்களில் இருக்க அச்சாதகனுக்கு கல்விச்சிறப்பு மெத்தவும் உண்டாகும். எனது சற்குருவான போகமாமுனிவரது கருணா கடாட்சத்தை முன்னிறுத்தி நான் (புலிப்பாணி) இதனைப் பதமாகப் கூறினேன்.
Sonntag, 9. September 2012
Pulippani-சகடயோகம்

Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen