பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
பகலவனுஞ் சனியோடு பாம்புசேர
கூரப்பா குமரனவ னுதிக்குமுன்னே
கொற்றவனே பிதுருக்கு கண்டஞ்சொல்லு
ஆரப்பா அத்தலத்தோன் சுபனைக்கூடி
அப்பனே கண்ணுற்று நோக்கினாலும்
சீரப்பா சிலகாலம் பிதுரிருந்து
சிவலோக மடைவனடா செயலைக்கூறே.
இன்னுமொரு புதுமையான செய்தியினையும் கூறுகிறேன். அதனையும் நன்கு கேட்பாயாக! சூரியபகவானும், சனியும், பாம்பும் சேர்ந்து நிற்க உதிக்கும் ஜென்மன் பிறப்பதற்கு முன்னமேயே பிதுருக்குக் கண்டம் ஏற்படும். ஆனாலும் அவர்கள் நின்ற அத்தலத்திற்குரியோன் சுபரைக் கூடினும் அல்லது சுபரது பார்வை பெறினும் சீரே ஏற்படும். எவ்வாறெனில் பிதுகர்கள் சில காலம் இருந்து பின்னர் சிவலோகமடைவர் என்பதே அது என்பதனை போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen