சொல்லுகிறேன் இருநாலில் செவ்வாய்தோன்ற
சூரியனா ரரவுடனே சேர்ந்துநிற்க
வில்லவே விஷந்தீண்டி சாவான் சென்மம்
விதமான் களத்திரத்தால் வேதைமெத்த
நல்லவே லெக்கினேச னாராமாதி
நஞ்சுள்ள கரும்பாம்பு சேர்ந்திட்டாலும்
புல்லவே மருந்தாலே கண்டம்சொல்லு
பூதலத்தில் புலிப்பாணி களறிட்டேனே.
இன்னுமொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு எட்டில் செவ்வாய் நிற்க சூரியனோடு பாம்பும் சேர்ந்துநிற்க அச்சென்மன விஷம் தீண்டலால் உயிரிழப்பான். அவனுக்குக் களத்திரத்தாலும் துன்பமே. இன்னம் மெத்தவும் நல்லவனான இலக்கினாதிபதிக்கு ஆறாம் இடத்திற்குடையவன் நஞ்சுண்டு கரும்பாம்பான இராகுவுடன் கூடினாலும் மருந்தால் அச்சாதகனுக்குக் கண்டம் என்று கூறுவாயாக! இதனைப் போகமா முனிவர்¢ன் அருளாணையால் புலிப்பாணி நவின்றிட்டேன்
Keine Kommentare:
Kommentar veröffentlichen