Sonntag, 9. September 2012

புலிப்பாணி:-தேவனென்று









பாரப்பா இரு ஐந்தில் புந்திநிற்க பகருகின்ற பரமகுரு யேழில்நிற்க ஆரப்பா அசுரகுரு யெட்டில் நிற்க அப்பனே மீனத்தில் அருக்கன் பிள்ளை வீரப்பா வில்வளவில் சேயும் நிற்க விளங்குகின்ற மற்றோர்கள் யெங்கும்நிற்க கூறப்பா குமரனையுங் கண்டுங்காணார் குவலயதில் தேவனென்று கூறினேனே -விளக்க உரை- மற்றொரு கருத்தையும் நீ கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தில் புதன் நிற்க எல்லாராலும், புகழ்ப்படும் குரு பகவான் ஏழாம் இடத்தில் நிற்க அதே நேரத்தில் அசுர குருவான சுக்ராச்சாரியார் எட்டில் நிற்க அப்பனே! மீனத்தில் சூரியகுமாரனான சனியும், தனுசில் செவ்வாயும் நிற்கவும், பிற இடங்களில் வேறு கிரகங்கள் நிற்கவும் பிறந்த குமாரனைப் பிறர் கண்டும் காணார் என்றும் இந்நிலவுலகத்தில் தேவன் அவனே என்றும் போகமா முனிவரின் கருணாகடாட்சம் பெற்ற புலிப்பாணி கூறினேன்.






Keine Kommentare:

Kommentar veröffentlichen