Sonntag, 9. September 2012

Pulippani-தாரை யோகம்1


பாரப்பா பதினைந்து நாளிலேயும் பகருகின்ற பால்மதியும் வெய்யோனைத்தான் சீரப்பா சீறியே அரவந்தீண்டில் செத்திடுவர் போர்முகத்தில் அனந்தம்மன்னர் ஊரப்பா ஊரெங்கும் பேதி அம்மை உத்தமனே கவுமாரி யாலேசீக்கு பாரப்பா மன்னர்களு மடியாவிட்டால் மகத்தான அன்னமது அரிதாம், பாரே -விளக்க உரை- இன்னொரு கருத்தையும் நன்கு கவனிப்பாயாக! வளருகின்ற கலையால் பதினைந்து நாள்களில் உயர்வு பெறும் சந்திரனையும் மற்றும் சூரியனையும் (இராகு கேது ஆகிய) பாம்பு சீறித் தீண்டும் சீர் பெறில் போர் முகத்தில் அனெகம் மன்னர் இறந்தொழிவர்; ஊரெங்கும் கொள்ளை நோயும், அம்மை பேதி போன்ற தீய வியாதிகளும் கெளமாரியின் கருணையினால் உத்தமனே வந்து வாய்க்கும். அவ்வாறு மன்னர்கள் மடியாவிடின் பெருமைக்குரிய அன்னமது கிடைப்பது அரிதாகிப் போகும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen