Sonntag, 9. September 2012

Pulippani- Venus சுக்கிரன்






வேளப்பா அசுரகுரு கேந்திரகோணம்
கெட்டவர்கள் கண்ணுற்று பார்த்திட்டாலும்
ஆளப்பா அசுரகுரு பலனளிப்பர்
அப்பனே உப்பரிக்கை மேடையுண்டு
வாளப்பா வயிரங்கள் முத்துமாலைகள்
வளமாகப் பொருந்தி நிற்கும் வளவிலேதான்
நீளப்பா நின்றதொரு இராசியாதி
நிலையறிந்து புவியோர்க்கு நிகழ்த்துவாயே
 -விளக்க உரை- புலிப்பாணி கூறுவதைச் சற்றே கேட்பாயாக! அசுரர்களின் குரு எனப் போற்றி செய்யப்பெறும் சுக்ராச்சாரி சாதகனின் கேந்திர கோணத்தில் நிற்க அவரைத் தீய கோள்கள் பார்ப்பினும் அவர் நற்பலன்களையே தருவார். அச்சாதகனுக்கு உப்பரிகை மேடையும், கனவயிரமும் முத்துமாலை போன்ற அணிமணிகளும் அவன் மனையில்  பொருந்தி இன்பம்  தருவதாகும். இதனை இலக்கின, இராசி அதிபர்களின் பலமுணர்ந்து ஆய்ந்து கூறுக.      

Keine Kommentare:

Kommentar veröffentlichen